ஒரே இடத்தில் 50,000 ஆடுகள்.. ரூ. 8 கோடிக்கு சேல்ஸ்..

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையொட்டி ரூ 8 கோடிக்கு ஆடு விற்பனை-
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையொட்டி ரூ 8 கோடிக்கு ஆடு விற்பனையானது. அதாவது ஒரே நாளில் 50 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆகி அசத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகபெரிய வாரச்சந்தையாக குந்தாரப்பள்ளி சந்தை திகழ்கிறது. இங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள் கோழிகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது.
விற்பனைக்கு வரும் ஆடுமாடுகளை வாங்க அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சேலம் ஈரோடு கோவை திருச்சி உட்பட பல மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஆடுமாடுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய சந்தை தீபாவளி ஸ்பெஷல் சந்தையாக மாறியது. வழக்கத்திற்கு மாறாக தீபாவளி பண்டிகையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைகாக வந்தது. ஆடுகளை வாங்க பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடைகொண்ட கிடா ஆடு ரூ 5 முதல் 6 ஆயிரம் வரையில் விற்பனை ஆகும். தற்போது தீபாவளி பண்டிகையொட்டி கூடுதலாக ரூ 7 முதல் 8 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் 3 ஆயிரம் முதல் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளை விற்க வாங்க அதிகளவில் விவசாயிகள் வியாபாரிகள் குவிந்ததால் குந்தாரப்பள்ளி பகுதியே மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. விடிக்காலை 4 மணிக்கு துவங்கிய சந்தையில் மதியம் 12 மணிக்குள் சுமார் ரூ 8 கோடி மேல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Comments